விளாத்திகுளத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு விளாத்திகுளம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ரூ.51 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக பல்வேறு தரப்பினர் முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 51 ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக ரூ.51 ஆயிரத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவீந்திரன் தலைமையில் வழங்கினர்.
இதில், சித்திரைவேல், லெக்கம்மாள், வாசுகி பவானி, சீதாராமன், சண்முக லட்சுமி, தனலட்சுமி, முத்துலட்சுமி, சோலைராஜ், முனீஸ்வரி, அன்ன மகாராஜா, வீரம்மாள், சண்முகப்பிரியா ராஜாராம், வேல்த்தாய், ராமசுப்பு, தவசிஅம்மாள், லெக்கம்மாள், ஜெயந்தி, சின்ன பொண்ணு உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.