தூத்துக்குடி மாவட்ட பாஜக நிர்வகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
பாஜக மாநில தலைமையின் அறிவுறுத்தல் படி, மாவட்ட அலுவலகத்தில் வைத்து, தூத்துக்குடி மாவட்ட பாஜக நிர்வகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், கட்சியை பலபடுத்து தல்,கட்சியின் செயல்பாடுகள், கடந்த சட்டசபை தேர்தலில் கட்சியின் நடவடிக் கைகள் மற்றும் வாங்கிய ஓட்டு சதவிகிதங்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கபட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மாநில வணிகப்பிரிவு தலைவர் ராஜா கண்ண ன், கோட்ட இணை அமைப்பாளர் ராஜா ஆகியோர் வழி நடத்தினார்கள்.
மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம் , மாவட்ட பொதுச் செயலாளர் பிரபு , மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முரளிரத்தினம், வடக்கு மண்டல தலைவர் கனகராஜ் , வடக்கு மண்டல பொதுச் செயலாளர் செல்லப்பா, வடக்கு மண்டல தகவல் தொழில்நுட்ப தலைவர் காளிராஜ், கிழக்கு மண்டல தலைவர் சந்தனக்குமார், கிழக்கு மண்டல தகவல் தொழில்நுட்ப தலைவர் ஜெயக்குமார், தெற்கு மண்டல தலைவர் முத்து கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.