• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் வியாபாரியை கொலை செய்ய முயன்ற 7 பேர் ஆயதங்களுடன் கைது

  • Share on

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வியாபாரி யை கொலை செய்ய முயன்ற வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமி ருந்து பயங்கர ஆயதங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கார் பைக்கு கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதா நகரைச் சேர்ந்த பொய்யாமொழி மகன் ரவி என்ற பொன்பாண்டி (38) என்பவர் அதே பகுதியில் டீக்கடை மற்றும் செருப்புக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் தொழில் வளர்ச்சி மற்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரவி என்ற பொன்பாண்டி மீது பகை கொண்டு, அவருக்கு தொழில் ரீதியாகவும், பல்வேறு வகைகளிலும் இடையூறு செய்தும், அவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வந்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் 18.06.2021 அன்று மாலை வாதி டீக்கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு வரும்போது 4 பேர் 2 பைக்கில் வந்ததை கவனித்த ரவி என்ற பொன்பாண்டி வேகமாக வீட்டிற்குள் செல்ல முயன்ற போது, பைக்கில் வந்தவர்கள் அவரை வழிமறித்து, கையில் வைத்திருந்த அரிவாளால் சாவுலே என்று ஆபாசமான வார்தையில் பேசிக்கொண்டு கழுத்தை நோக்கி வேகமாக வெட்ட வந்துள்ளார், சுதாரித்துக் கொண்ட ரவி விலகியுள்ள தால் உயிர் தப்பியுள்ளார்.

அப்போது வீட்டிலிருந்த இருந்து அவரது சகோதரர்கள் ஓடி வந்து பார்த்தபோது, தெரு முனையில் ஸ்கார்பியோ காரிலிருந்த இறங்கிய சதீஸ் மற்றும் ஆம்ஸ்ட்ராங் ஆகிய இருவரும் அஜித், அலெக்ஸ் ரவியை கொல்ல முடியலன் னா ஓடிடுங்கடா என்றும், அதே நேரம் பொலீரோ காரிலிருந்து இறங்கி நின்று கொண்டிருந்த ஜோதிராஜா மற்றும் அவரது கூட்டாளிகளான ராசுக்குட்டி, மதன், ஜெரின் ஆகியோர் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து ரவி என்ற பொன்பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனையடுத்து  மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப் பாளர்  ஜெயக்குமார், தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்  மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி, தென்பாகம் காவல் ஆய்வாளர்  ஆனந்தராஜன் ஆகியோர் தலைமை யில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜ், உதவி ஆய்வாளர் வேல்ராஜ், சங்கர்,  சிவக்குமார், தலைமைக் காவலர்கள்  பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், மகாலிங்கம், செந்தில்,  திருமணி மற்றும் முத்துப்பாண்டி ஆகிய போலீசார் அடங்கிய தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

மேற்படி உத்தரவின் பேரில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தேடியதில் திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் 1) அஜித்குமார் என்ற அஜித் (26), தென்காசி மாவட்டம், அம்பாசமுத்திரம் இந்திரநகரைச் சேர்ந்த கண்ணன் மகன் 2) அலெக்ஸ்பாண்டி என்ற அலெக்ஸ் (29) தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் தலைவடன்வடலியைச் சேர்ந்த மாரிச்செல்வம் மகன் 3) மதன் (21), தாழையூத்து கட்டாம்புளி ஜெயக்குமார் மகன் 4) ஜெரின் (23), தாளமுத்துநகர் கணபதி நகரைச் சேர்ந்த சாமுவேல் மகன் 5) ஜோதி ராஜா (35), தூத்துக்குடி எட்டயாபுரம் ரோட்டைச் சேர்ந்த தங்கராஜ் மகன் 6) முகேஷ் ராஜா என்ற ராசுக்குட்டி (25) மற்றும் தருவைக் குளத்தைச் சேர்ந்த 7) அந்தோணி சதீஸ் (42) ஆகிய 7 பேரையும் கைது செய்து,  அவர்களிடமிருந்து 4 அரிவாள், 3 பைக்குகள் மற்றும் ஒரு ஸ்கார்பியோ கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மேற்படி கொலை முயற்சியில் ஈடுபட்ட 7 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து கொலை செய்ய முயன்ற பயங்கர ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

  • Share on

அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை : அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்

சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது!

  • Share on