• vilasalnews@gmail.com

அனுமதியின்றி குளத்தில் மண் அள்ளிய 3 பேர் கைது - ஜேசிபி இயந்திரம், டிப்பர் லாரி பறிமுதல்

  • Share on

புதுக்கோட்டை அருகே உரிய அனுமதியின்றி குளத்தில் மண் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து  ஜேசிபி இயந்திரம், டிப்பர் லாரி மற்றும் 2 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர்  இம்மானுவேல் ஜெயசேகர் தலைமையிலான போலீசார் இன்று (19.06.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எல்லைநாயக்கன்பட்டி குளத்தில் ராமநாதபுரம் ஊரை சேர்ந்த நம்பி மகன் சங்கரலிங்கம் (40), சாயர்புரத்தைச் சேர்ந்த செந்தில் மகன் இசக்கிராஜா (26) மற்றும் பொட்டலூரணியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மணிகண்டன் (22) ஆகிய 3 பேர் உரிய அனுமதியின்றி குளத்தில் ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரி மூலம் சரல் மண் திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து, புதுக்கோட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர்  இமானுவேல் ஜெயசேகர் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட  3 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து ஜேசிபி இயந்திரம், டிப்பர் லாரி மற்றும் இரண்டு யூனிட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.

  • Share on

தூத்துக்குடியில் வீட்டு காம்பவுண்டு வாசல் கேட்டுக்கு பூட்டுப்போட்டதால் வந்த பிரச்சனை : கத்தியால் ஒருவர் கழுத்தறுப்பு!

4½ வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

  • Share on