ஓட்டப்பிடாரம் தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக சாா்பில் பி. மோகன், திமுக சாா்பில் எம்.சி. சண்முகையா, புதிய தமிழகம் கட்சி தலைவா் க. கிருஷ்ணசாமி உள்பட மொத்தம் 17 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
இத்தேர்தலில் திமுக வேட்பாளா் 73,110 வாக்குகள் பெற்று தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் மோகனை விட 8,510 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் பதவியேற்காமல் இருந்த சண்முகையா, இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு முன்னிலையில், எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த 2019இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற எம்.சி. சண்முகையா, 2-ஆவது முறையாக எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது