தூத்துக்குடியில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இந்தியன் பவர்ஜிம் சார்பில் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக பல்வேறு அமைப்பினர் முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் உள்ள இந்தியன் பவர்ஜிம் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக ஜிம் உறுப்பினர்களின் பங்களிப்பாக ரூ.10 ஆயிரத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவனிடம் ஜிம் மாஸ்டர் சரவணன் தலைமையில் உறுப்பினர்கள் வழங்கினர்.