தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியர் செந்தில் ராஜை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் மரியாதை நிமித்தமாக அதிகாரிகளுடன் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். வங்கி செயல்பாடுகள், கடன் வழங்குதல் குறித்து அவர்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பதவியேற்றவுடன் அதிகாரிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், புதிய மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜை நேற்று ( 23.11.2020 ) பூங்கொத்து கொடுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சிவகாமி, பொது மேலாளர் வெற்றிவேலன், முதன்மை வருவாய் அலுவலர் அருள் சேசு ஆகியோர் உடன் இருந்தனர். மத்திய கூட்டுறவு வங்கி செயல்பாடுகள் மற்றும் கடன் வழங்குதல் குறித்து ஆட்சியர் வங்கித் தலைவர் சுதாகரிடம் முழுமையாக கேட்டறிந்தார்.