தூத்துக்குடி தெற்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் சசிகலாவை ஒருபோதும் அதிமுகவிற்குள் நுழைய அனுமதிக்கமாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏகப்பட்ட பரபரப்புகள் நடந்துவிட்டன. ஆட்சி பொறுப்பு, ஓபிஎஸ், இபிஎஸ் என கைமாறியது. ஆட்சி கட்டிலில் அமரலாம் என முயற்சி செய்த சசிகலா சிறைக்கு சென்றார். 4 ஆண்டுகள் கழித்து அவர் வெளியில் வந்திருக்கிறார். அதற்குள் அதிமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்டிருக்கிறார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி.பழனிச்சாமியும் கட்சி பொறுப்பில் இருக்கிறார்கள், சசிகலாவின் உறவினர் டிடிவி.தினகரன் தனியாக அமமுக என்று ஒரு கட்சியை தொடங்கி சமீபத்தில் அதிமுகவிற்கு எதிராக தேர்தலில் போட்டியும் போட்டுவிட்டார்.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும், துணைமுதல்வராக ஓ.பன்னீர்செல்வமும் இருந்து வந்தனர். பத்து ஆண்டு காலம் ஆட்சி பொறுப்பில் இருந்து வந்த அவர்கள் தோல்வியை சந்தித்தித்தனர். திமுக ஆட்சியை பிடித்தது. தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக இருந்து வருகிறார்.
நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்பாகவே சிறையிலிருந்து வெளியில் வந்த சசிகலா, அரசியலைவிட்டே ஒதுங்குகிறேன் என்று அறிவித்துவிட்டு மெளனம் காத்தார். தற்போது அவர் அடிக்கடி அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களிடம், நான் விரைவில் வருகிறேன் என்கிற அர்த்ததில் பேசி அதன் ஆடியோவை டிவி மற்றும் சமூக வலைதளங்களில் வரும்படி செய்து வருகிறார்.
இதனால் கொதித்துப்போன அதிமுக நிர்வாகிகள், சசிகலாவுக்கு எதிராக அவசர கூட்டத்தை கூட்டி பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியி ருக்கிறார்கள்.
அந்த வகையில் தூத்துக்குடியில் தெற்குமாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அவசர கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல் முன்னிலை வகித்தார். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன் வரவேற்று பேசினார்.
அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் வக்கீல் முள்ளக்காடு செல்வக்குமார், முன்னாள் வாரிய தலைவர் மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் அமிர்த கணேசன், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் சந்தனம், ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி,
இணைச்செயலாளர் செரினா பாக்யராஜ், மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதி மணிகண்டன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பிரிவு செயலாளர் டேக் ராஜா,மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், ஒன்றிய கழகச் செயலாளர்கள் திருச்செந்தூர் ராமச்சந்திரன், ஸ்ரீவைகுண்டம் மேற்கு காசிராஜன், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு மாவட்ட கவுன்சிலர் அழகேசன்,
ஆழ்வார்திருநகரி கிழக்கு விஜயகுமார், மாநகரப் பகுதி கழக செயலாளர்கள் பொன்ராஜ், நட்டார் முத்து, ஜெய்கணேஷ், கிழக்கு பகுதி பொறுப்பாளர் முன்னாள் சேர்மன் மனோஜ், பேரூராட்சி கழகச் செயலாளர்கள் ஸ்ரீவைகுண்டம் காசிராஜன், ஆழ்வார்திருநகரி செந்தில் ராஜ் குமார், ஆறுமுகநேரி ரவிச்சந்திரன், காணம் செந்தமிழ் சேகர், நாசரேத் கிங்ஸ்லி, ஆத்தூர் சோமசுந்தரம், சாயர்புரம் துரைசாமி ராஜா, பெருங்குளம் வேதமாணிக்கம், தென்திருப்பேரை ஆறுமுகநயினார்,
மற்றும் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சத்யா லட்சுமணன்,துணைச் செயலாளர் ரமேஷ் கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் சுந்தரேஸ்வரன், பொருளாளர் பரிபூரணராஜா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் முனியசாமி, துணைச் செயலாளர் வக்கீல் சரவண பெருமாள், மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் ஜான்சன் தேவராஜ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி தலைவர் ராதா, இணைச் செயலாளர் பாஸ்கர்,
மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர்கள் லக்ஷ்மணன், கல்விக்குமார், துணைத் தலைவர் கேடிசி ஆறுமுகம், பகுதி துணை செயலாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி சொக்கலிங்கம், பகுதி மாணவரணி செயலாளர் மணிகண்டன், வட்டக் கழக செயலாளர்கள் சுடலைமணி, முபாரக் ஜான், மணிகண்டன், முரளி, உதயசூரியன், பூரணச்சந்திரன், ஜெகதீஸ் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சகாய ராஜா, பாலஜெயம், சாம்ராஜ் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
அந்த கூட்டத்தில், ’’தமிழ்நாட்டை சமதர்மதின் புதிய பூமியாக மாற்றிட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒப்பற்ற இயக்கத்தினை ஆரம்பித்து. ஏழை, எளியவர்களும், உழைப்பாளிகளும், தாய்க்குலமும் போற்றிடும் வகையிலும், அணைத்து மாணவ மாணவியருக்கும் சத்துணைவு திட்டத்தினை செயல்படுத்தி, பசியில்லா தமிழ்நாட்டை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்.
அவரின் மறைவிற்குப் பின்னர் அதிமுகவை காணாமல் போகச் செய்திடலாம் என்று மனப்பால் குடித்தவர்களின் மனக்கணக்குகளை தூள், தூளாக்கி, மீண்டும் அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உலகம் புகழும் இயக்கமாக்கி காட்டியவர் ஜெயலலிதா. அவர் தனது வாழ்வின் அற்புதமான 34 ஆண்டுகளை அதிமுகவின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டின் உயர்வுக்காகவும் ஆயிரம் இன்னல்களுக்கிடையே அரும்பாடுபட்டார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் புயல் வீசும், அனைத்தும் தகர்ந்து போய்விம், இனி தமிழ்நாட்டில் குழப்பம்தான் மிஞ்சும் என்று எண்ணி இருந்தோருக்கு ஏமாற்றத்தைப் பரிசளித்து, அதிமுகவை ஒற்றுமையாக வழீநடத்தி, சிறப்பாக ஆட்சி நடத்தி, அதிமுகவை வழிநடத்திச் செல்கின்ற அதிமுக ஒருங்கிணைப் பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப் பாளருக்கும் எங்களது பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
பலகட்சி கூட்டணி, பல ஆயிரம் கோடி செலவு, பகட்டான வாக்குறுதிகள், பசுத்தோல் போத்திய புலிகளாய் பகல் வேஷம் என்ற பரிவாரங்களுடன் வந்து, மக்களிடம் நாடகமாடி தேர்தலை சந்தித்த திமுக மற்றும் எதிர் அணியினர் சட்டமன்ற தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு சதவீத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறது.
சூழ்ச்சிகள், தந்திரங்கள், சதிச் செயல்கள் அனைத்தையும் முறியடித்து மக்களின் பேரன்பைப் பெற்று, அதிமுக தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றிருகிறது. பிரதான எதிர்கட்சியாக, அதிமுகவின் 66 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டின் நலனுக்காக சட்டமன்றத்தில் உரக்கக் குரல் எழுப்பி, உண்மை மக்கள் தொண்டர்களாகப் பணியாற்ற துடித்துக் கொண்டிருக்கின்றனர்.
சட்டமன்ற தேர்தலின் போது, தான் அரசியலில் இருந்து முழுமையாக விலகி இருப்பதாக ஊடகங்ககள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக பகிரங்கமாக செய்தி வெளியிட்ட சசிகலா, சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவிற்குப் பிறது அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது தலைமையில் இவ்வளவு வலுவும், பொலிவும், தொண்டர் பெரும்படையும், மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதைப் பார்த்ததும், அரசியலில் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ள, அதிமுகவை அபகபரிக்கும் முயற்சியில் இறங்கப் போவதாக, ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதாக, வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.
மேலும் இவர் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லை. இவ்வாறு சசிகலா தொலைபேசியில் பேசும் பொழுது சாதிய உணர்வுகளை தூண்டும் விதமாக பேசுவது, ஒருதாய் வயிற்று பிள்ளைகளாக வாழ்ந்து வரும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்பதை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், சசிகலாவிற்கும் எவ்விதமான தொடர்போ, சம்பந்தமோ இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜெயலலிதா மற்றும் அதிமுக செயல்வீரர்களின் உழைப்பபைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், நற்பெயரை அழிக்கும் நச்சுக் களைகளாகவும் தங்களை வளப்படுத்திக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர், மீண்டும் அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்க் கழகத்தை அபகரித்துவிடலாம் என்ற வஞ்சக வலையை, ஒவ்வொரு நாளும் விரித்துக் கொண்டிருக்கின்றனர்.
மகத்தான இரு தலைவர்களின் ஒப்பற்ற தியாகத்தால், ஓங்கு புகழ் பெற்றிரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மக்களின் பேரியக்கமாக வரலாற்றில் நிலைபெறுமே தவிர, ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக தன்னை ஒருபோதும் அழித்துக் கொள்ளாது என்பதை நினைவுபடுத்கிறோம்.
23.05.2021ம் தேதியிட்ட அறிக்கையின்படி சசிகலாவிடம் தொலைபேசியில் உரையாடி அதிமுகவில் இருந்து உடனடியாக நீக்கியதையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் மீது 14.06.2021 அன்று தலைமைக் கழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தயவு தாட்சன்யமின்றி கடும் நடவடிக்கைக்ள எடுக்கப்பட்டதையும், மற்றும் அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக சாப்பாக வரவேற்கிறோம்.
மேலும் கழகத்தின் ஒற்றுமையினை கட்டிக்காக்கும் வகையில், கண்ணின் மணியென அதிமுகவை காப்போம் உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும் தமிழ்நாட்டின் மக்களின் இதய கணியாம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கண்ட கனவை நினைவாக்குவோம்.
எனக்குப் பின்னாலும் நூறாண்டுகள் ஆனாலும் கழகம் மக்கள் தொண்டில் முன்னணியில் நின்று பணியாற்றும் என்று புரட்சித்தலைலி அம்மா அவர்களின் லட்சியத்தை நிறைவேற்று வோம் என்று உளமாற உறுதி ஏற்கிறோம். மீண்டும் அதிகவின் ஆட்சியை தமிழ்நாட்டில் அமைமப்போம் என்ற தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றுகிறோம்.
ஜெயலலிதாவின் சூளூரையை எங்கள் நெஞ்சில் நிறுத்தி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் செயலாற்று வோம் என்று உறுதி ஏற்கிறோம்.
எதிரிகள் ஒரு புறம், துரோகிகள் மறு புறம் இவர்கள் இருவரையும் நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் எதிர்கொண்டு கழகத்திற்கு பெறுவாரியான வாக்குகளை பெற்று தந்த கழக இணை ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கும், கழக ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் பாராட்டுகளையும், நன்றிகளையும் இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.
தெள்ளிய நீரோடையில் கற்களை வீசலாம், குழப்பங்களை உருவாக்கலாம் பதவி என்னும் மீன்களை பிடிக்கலாம் என திட்டமிட்டு ஆடியோ நாடகம் நடத்திடும் கேசட் ராணி சசிகலா அவர்களின் கபட நாடகத்தை முறியடிப்போம்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய, புரட்சி தலைவி அம்மா கட்டி பாதுகாத்த கழகத்தை கம்பெனியாக மாற்றிய, மாண்புமிகு அம்மா அவர்களின் மரணத்திற்கு விடை கூறாத தனது உறவினரை பினாமியாக வைத்து அமமுக எனும் கட்சியை ஆரம்பித்து கழகத்தை சட்டமன்ற பொதுத் தேர்தலில் தோற்கடிக்க அனைத்து வகையிலும் சூழ்ச்சி செய்த திருமதி. சசிகலா தேர்தலுக்கு முன்னும் பின்னும் ஒற்றுமையுடன் திகழும் கழகத்திற்குள் நுழைந்திட துடிக்கும் மர்மத்திற்கு வர்மம் தட்டுவோம்.
நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளிளும் கழக வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் தோற்கடிக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் திருமதி. சசிகலா டி.டி.வி. தினகரனை தூண்டிவிட்டு மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் ஏற்படாதிருக்க செய்த சதி செயலை வண்மையாக கண்டிப்பதோடு அத்தகைய சதிகாரர்களை ஒருபோதும் கழத்திற்குள் நுழையவிட அனுமத்க்க மாட்டோம் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சபதம் ஏற்கிறது.
தலைமை செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளருமான திருமதி. எம். குருத்தாய் என்ற வின்னரசி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது.
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியின் கழக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் திரு. கடம்பூர் செ.ராஜூ அவர்களுக்கு பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றிபெற செய்யத கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், கழகத்திற்கு துரோகம் விளைவித்த டி.டி.வி. தினகரனை தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்த முன்னாள் அமைச்சர் திரு. கடம்பூர் செ.ராஜூ அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கவும் தீர்மானிக்கப்படுகிறது’’ இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.