தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் பாஜகவின் சார்பாக சில தினங்களுக்கு முன்பு மறைந்த கட்சியின் முக்கிய பொறுப்பில் அங்கம் வகித்த கட்சி நிர்வாகிகளான
வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் மகேந்திரன், மேற்கு மண்டல ஓ.பி.சி அணி தலைவர் பட்டுராஜன், வடக்கு மண்டல கிளைத்தலைவர் ஞான்ராஜ்,
ஓ.பி.சி அணி செயற்குழு உறுப்பினர் அமிர்தராஜ் (நாசரேத்), மேற்கு மண்டல கிளைப் பொறுப்பாளர் சந்திரமணி, அரசு தொடர்பு பிரிவு தெற்கு மண்டல தலைவர் சரவணன், முன்னாள் மேற்கு மண்டல தலைவரின் மனைவி ஜெயா கண்ணன், கிழக்கு மண்டல பொருளாளர் வன்னியராஜ் தந்தை தங்கமணி நாடார், தெற்கு மண்டல முன்னாள் பொது செயலாளர் காளிமுத்து
ஆகியோரது மறைவிற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமையில் நினைவு அஞ்சலி செலுத்தி அவர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது.
இந்நிகழ்வின் போது, வணிகர் பிரிவு மாநில தலைவர் ராஜா கண்ணன், கோட்ட இணை அமைப்பாளர் ராஜா,
வடக்கு மாவட்ட பிஜேபி தலைவர் போத்தீஸ் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஓபிசி மாநிலச் செயலாளர் விவேகம் ரமேஷ் , தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகம் மாவட்ட தலைவர் முரளி ரத்தினம், மேற்கு மண்டல பொறுப்பாளர் பாலமுருகன், வடக்கு மண்டல தகவல் தொழில்நுட்ப தலைவர் காளிராஜ், கிழக்கு மண்டல தகவல் தொழில்நுட்பத் தலைவர் ஜெயக்குமார் மற்றும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.