கோவில்பட்டி அருகே முயல் வேட்டையில் ஈடுபட்டதாக இளைஞர் ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோவில்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட நாகலாபுரம் பகுதியில் சிலர் முயல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கோவில்பட்டி வனச்சரக அலுவலர் பாரதி தலைமையில் வனக்காப்பாளர்கள் பாலகிருஷ்ணன் முகம்மது பைசல் ராஜா உள்ளிட்டோர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்பொழுது நாகலாபுரம் பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்டதாக சுப்பையா பாண்டியன் என்பவரது மகன் கார்த்திக் என்பவரை கைது செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது.