தட்டப்பாறை அருகே உள்ள கீழ செக்காரக்குடி கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
தட்டாபாறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் காவலர்கள் விக்னேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கீழ செக்காரக்குடி கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் வைத்து சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட அக்கிராமத்தை சார்ந்த சேர்ந்த மேலத்தெரு சுப்பையா என்பவரது மகன் ஆதிமூலம் ( வயது 58 ) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 92 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட ஆதிமூலத்தின் மீது ஏற்கனவே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.