• vilasalnews@gmail.com

பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1லட்சம் நிவாரணத் தொகை வழங்கல்!

  • Share on

தூத்துக்குடி அருகே பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் வருடம் 16 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 01.03.2019 அன்று புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெயலெட்சுமி விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நிவாரணம் கிடைக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கியுள்ளது. மேற்படி நிவாரணத்தொகை காசோலையை  தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான எதிராக குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் கோபி மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

  • Share on

குரும்பூர் அருகே சட்டவிரோதாமாக ஆயுதங்களை தயாரித்து வைத்திருந்தவர் கைது.

ஆட்சியர் செந்தில் ராஜை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் அதிகாரிகளுடன் சென்று சந்திப்பு

  • Share on