• vilasalnews@gmail.com

புகழேந்தி விமர்சனத்திற்கு பதில் அளிக்க வேண்டிய தேவை இல்லை - கடம்பூர் ராஜூ பேட்டி

  • Share on

அதிமுக உறுப்பினராக இருந்து தான் கட்சியை விமர்சிக்க முடியும். புகழேந்தி நீக்கப்பட்ட பிறகு அவரது விமர்சனத்திற்கு பதில் அளிப்பது தேவையில்லை என முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி எம்எல்ஏவுமான கடம்பூர் ராஜூ கூறினார்.

இதுதொடர்பாக அவர் கோவில்பட்டியில் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது :

திமுக பொறுப்பேற்றது முதல் கொரோனா இரண்டாவது அலை தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் அரசியல்  பாராமல் நாங்கள் ஒத்துழைப்பு வழங்குகிறோம். அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை அதிமுக பொருளாளராக பணியாற்ற என்னை தேர்ந்தெடுத்து உள்ளனர்.

இது கோவில்பட்டி தொகுதியில் நான் பெற்ற வெற்றிக்கு அதிமுக அளித்த அங்கீகாரமாக கருதுகிறேன். இதற்காக தொகுதி மக்கள் சார்பில் ஒருங்கிணைப் பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக உறுப்பினராக இருந்து கொண்டுதான் கட்சியை விமர்சிக்க முடியும். புகழேந்தி நீக்கப்பட்ட பிறகு அவரது விமர்சனத்திற்கு பதில் அளிப்பது தேவையில்லை. அதிமுகவு க்கு யாரும் ஜாதி சாயம் பூச முடியாது இதனை மக்கள் நம்ப மாட்டார்கள் 

அதிமுக ஆட்சியின்போது கோவில் பட்டியில் ரூ.4 கோடி மதிப்பில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த பணியை துரிதப் படுத்த வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

  • Share on

முறப்பநாடு அருகே லாரி டிரைவர் கொலை - இருவர் கைது!

தூத்துக்குடி அருகே குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து மறியல்!

  • Share on