• vilasalnews@gmail.com

பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி!

  • Share on

பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி சென்னை எழும்பூர் தாய் சேய் நல  மருத்துவமனையில் தொடங்கியது.

சென்னை எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா  தடுப்பூசி போடும் நிகழ்வினை மருத்துவமனை இயக்குனர் விஜயா இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளரிடம் தெரிவிக்கையில் :

முதற்கட்டமாக 9 தாய்மார்களுக்கு கோ வாக்சின் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் யாருக்கும் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்றும்  தெரிவித்தார். மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தாங்கள் பரிந்துரைக் கிறோம். அதற்கான ஆணைக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என கூறினார்.


  • Share on

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் : கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் நேரில் ஆய்வு!

தூத்துக்குடி சர்க்கரை நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்பது?

  • Share on