தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் வெள்ள தடுப்பு கால்வாய் பணிகள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை, தூத்துக்குடி மாவட்ட கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் திட்டப்பணிகள் (ரூ.10 கோடிக்கு மேல்) கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனருமான பிரகாஷ் (16.06.2021) இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி திருச்செந்தூர் ரவுண்டானா அருகில் ரூ.83.87 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வெள்ளநீர் தடுப்பு கால்வாய் பணிகள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்று வரும் என்.எச்.45 மீளவிட்டான் பகுதியில் ரூ.69.66 கோடி மதிப்பீட்டில் வெள்ள நீர் வடிகால் அமைக்கும் பணிகள், 3ம் மைல் பக்கில் ஓடை பகுதியில் ரூ.78.88 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு மற்றும் சீரமைப்பு பணிகள், தூத்துக்குடி மாநகராட்சி பி.வா.குளம் ரூ.11.17 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள், தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு பகுதியில் ரூ.7.62 கோடி மதிப்பீட்டில் நடைபாதையுடன் கூடிய சிமெண்ட் ரோடு அமைக்கும் பணிகள், தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு பூ மார்க்கெட் பகுதியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டுமான பணிகள் மற்றும் மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் ரூ.53 கோடி மதிப்பீட்டில் மறு கட்டமைப்பு பணிகளை,
தூத்துக்குடி மாவட்ட கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் திட்டப்பணிகள் (ரூ.10 கோடிக்கு மேல்) கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனருமான பிரகாஷ், இன்று (16.06.2021) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் தரமாகவும், விரைவாகவும் முடிக்க அலுவலர் களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருத்தஞ் ஜெய் நாராயணன், தூத்துக்குடி மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மக்கனி, தூத்துக்குடி மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.வித்யா, தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பிரின்ஸ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.