• vilasalnews@gmail.com

மாப்பிள்ளையூரணியில் நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் - 14 வகை மளிகை பொருட்கள் வினியோகம் : கூட்டுறவு சங்கத் தலைவர் சரவணகுமார் துவக்கி வைத்தார்!

  • Share on

மாப்பிள்ளையூரணி மற்றும் அதன் சுற்று வட்டார பன்னிரண்டு நியாயவிலைக் கடையில் தமிழக அரசு சார்பில் இரண்டாவது தவணையாக கொரோனா நிவாரண உதவித் தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற, கூட்டுறவு சங்கத் தலைவரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத் தலைவருமான சரவணகுமார் ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன், மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, கூட்டுறவு கடன்சங்க துணை தலைவர் சிவகுமார், மாவட்டபிரதிநிதி சப்பாணிமுத்து, கிளைசெயலாளர்கள் காமராஜ், சுதாகர், ஆனந்தகுமார், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பார்வதி மற்றும் கௌதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் நிவாரண நிதி, மளிகைப் பொருட்கள் வழங்கல் : கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தனர்

தூத்துக்குடி அதிமுக பிரமுகரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய சசிகலா!

  • Share on