தூத்துக்குடி பூபால் ராயபுரம் நியாயவிலைக் கடையில் தமிழக அரசு சார்பில் இரண்டாவது தவணையாக கொரோனா நிவாரண உதவித் தொகை ரூபாய் 2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தனர்
நிகழ்ச்சியில், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி. ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன்,வ ட்டாட்சியர் ஜஸ்டிஸ், உணவு வழங்கல் தாசில்தார் வதனால், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், துணைப் பதிவாளர் ரவீந்திரன், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் அந்தோணி பட்டுராஜ், பசுமை பண்ணை மேலாளர் ராஜதுரை,
பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், துணைச் செயலாளர் பாலு, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், மாணவரணி துணை அமைப்பாளர் பால குருசாமி, சங்கர், பால் மாரி,
தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணி கண்ணன், மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், மீனவர் அணி அமைப்பாளர் அந்தோணி கண்ணன், வட்டச் செயலாளர்கள் சேகர், கருப்பசாமி
அனைத்திந்திய மாதர் சங்க மாவட்ட செயலாளர் தனலட்சுமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் ஞானசேகர், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராமர், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் லிங்கராஜா, பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.