தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் என பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட ரவுடி கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து அரிவாள் மற்றும் இருச்சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் பிள்ளைவிளை சந்தனமாரியம்மன் கோவில் அருகே தூத்துக்குடி மாதாநகரைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் பலவேச முத்து (எ) குரங்கு முத்து (36) என்பவர் ஒருவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரண நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தாளமுத்து நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் கோவில் பிள்ளைவிளை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது இரு சக்கர வாகனத்தில் எதிரி பலவேசமுத்து (எ) குரங்கு முத்து (36) மடக்கி பிடித்து கைது செய்தனர். பின் அவரிடமிருந்து அரிவாள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள எதிரி பலவேசமுத்து (எ) குரங்கு முத்து என்பவருக்கு தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் 2 கொலை மிரட்டல் வழக்குகளிலும், ஏரல் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கிலும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.