• vilasalnews@gmail.com

மதுரை மாநகரம் தொன்மை மாறாமல் நவீனமாக்கப்படுவதற்கு திட்டமிடப்படும் : ஆணையாளர் கார்த்திகேயன்

  • Share on

மதுரை மாநகரம் தொன்மை மாறாமல் நவீனமாக்கப்படுவதற்கு  திட்டமிடப்படும் என புதிதாக பொறுப்பேற்றிருக்கும்  மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி புதிய ஆணையாளராக கார்த்திகேயன், இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் தெரிவித்ததாவது  :

மதுரை மாநகர மக்களுக்கு பணியாற்றுவதற்காக மதுரை மாநகராட்சியில் ஆணையாளராக  நியமித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு  முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மதுரை மாநகரம் மிகுந்த தொன்மையும், பழமையும் மிக்க நகரமாகும். மதுரை மாநகராட்சி 50 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சிறப்புமிக்க பெரிய மாநகராட்சியாகும்.

புதிய வளர்ச்சிக்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பொலிவுறு நகரத் திட்டம் (ஸ்மார்ட் சிட்டி ) மற்றும் அம்ரூத் திட்டங்களின் கீழ் பல்வேறு முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மதுரை மாநகரின் ஒவ்வொரு தெருவிற்கும், ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வரலாறு உண்டு. இவ்வரலாற்று சிறப்புமிக்க  மாநகரம் தொன்மை மாறாமல் நவீனமாக்கப் படுவதற்கான அடிப்படை திட்டமிடல் மேற்கொள்ளப் படும். மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகள், சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகள் தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்படும்.

அமைச்சர் பெருமக்கள் ஆலோசனை உடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து மதுரை மாநகரத்தில் கொரோனா பாதிப்பை இரண்டாவது முற்றிலும் கட்டுப்படுவதற்கான பணிகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப் படும் என்றார்.

ஆணையாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு  தொழில் வளர்ச்சி நிறுவனத்தில்  நிர்வாக இயக்குனர், டைடல் பார்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், சிப்காட் நிர்வாக இயக்குனர் ஆகிய பொறுப்புக் களை இதற்கு முன்னதாக வகித்துள் ளார். மேலும் கொரோனா கட்டளை மையத்தில்  கடந்த ஒரு மாத காலமாக பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்திய ரயில்வே, மத்திய அரசின் வர்த்தகத் துறையில் உதவிச் செயலாளர், திருப்பத்தூர் மற்றும் நாகப்பட்டினத்தில் சார் ஆட்சியராகவும் பணிபுரிந்து உள்ளார். எம்.பி.பி.எஸ், மருத்துவ படிப்பு பயின்று மருத்துவராகவும் பணிபுரிந்துள்ளார். என்பது குறிப்பிட தக்கது.

  • Share on

திருமலை நாயக்கர் அரண்மனை கல்வெட்டு ரகசியம்...மத்திய அமைச்சருக்கு சாமர்த்திய குட்டு வைத்த மதுரை எம்.பி.சு வெங்கடேசன்!

ஈரோடு பார்முலாவை மதுரையிலும் பயன்படுத்துவாரா புதிய காவல் துணை ஆணையர்!

  • Share on