• vilasalnews@gmail.com

இப்படி வந்தா தான் நாளை முதல் கடையில் மதுபானம் உண்டு : டாஸ்மாக் நிர்வாகம் கிடுக்குப்பிடி உத்தரவு!

  • Share on

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. 

மதுபானக்கடைகள் மூடலால் கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற சட்ட விரோத செயல்களும் ஆங்காங்கே  தலை தூக்கிய நிகழ்வும் நடந்தேறி வந்தது.

இந்த நிலையில் ஜூன் 14-ஆம் தேதி ( நாளை) முதல், கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக இருக்கும் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுவதாக  முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, 27 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் வழிகாட்டு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு ள்ளது. அதன் படி, டாஸ்மாக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது, டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த கண்டிப்பாக தடுப்பு வேலி அமைக்கப்பட வேண்டும்.

சமூக இடைவெளியை பின்பற்று கிறார்களா என இரண்டு பணியாளர்கள் மூலம் கண் காணிக்க வேண்டும். மேலும், மாஸ்க் அணிந்து வந்தால் மட்டும் தான் மதுபானங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்து ள்ளது. இந்த அறிவிப்பு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப் பட்டுள்ளது.

  • Share on

தமிழக முதல்வருக்கு தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கடிதம்!

திருமலை நாயக்கர் அரண்மனை கல்வெட்டு ரகசியம்...மத்திய அமைச்சருக்கு சாமர்த்திய குட்டு வைத்த மதுரை எம்.பி.சு வெங்கடேசன்!

  • Share on