• vilasalnews@gmail.com

காத்திருந்த மதுபிரியர்கள்...ஒரே நாளில் ஓகோ விற்பனை!

  • Share on

புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் மதுக்கடைகள் திறக்கப்பட்டதையடுத்து அங்கு ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மதுவிற்பனையாகியுள்ளது.

புதுச்சேரியில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு மதுபான கடைகள் நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபான கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், 42 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டதால், மதுப்பிரியர்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக கானப்பட்டு, கடைகள் முன் வரிசை கட்ட ஆரம்பித் தனர். இதனால் மதுக்கடைகளில் விற்பனையும் அதிகமாக இருந்தது.

வழக்கமாக ஒரு நாளில் புதுச்சேரியில் மாநிலம் முழுவதும் சுமார் ரூ.4 கோடிக்கு மதுபானம் விற்பனையாகும். ஆனால், நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மதுபானம் விற்பனையானது.

இதனால் மதுவிற்பனையாளர்களும் குஷி,  காத்திருப்பில் கிடந்த மதுபிரியர்களுக்கு கையில் மதுபானங்கள் கிடைக்கப்பெற்றதால் அவர்களும் குஷியானர்.

  • Share on

தனியார் வங்கி நிறுவனங்கள் மக்களிடம் கட்டாய படுத்தி பணம் வசூலிப்பதா? : காயல் அப்பாஸ் கடும் கண்டனம்

தமிழக முதல்வருக்கு தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கடிதம்!

  • Share on