தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
நோய் தொற்று பரவல் கட்டுக்குள் வந்திருந்தாலும், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை , மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுபாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகமுள்ள 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதர 27 மாவட்டங்களில் சலூன்கள் குளிர்சாதன வசதி இல்லாமல் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகளுக்கு அனுமதி
கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம்.
மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி விற்பனை, பழுது பார்க்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி
தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சலூன்கள், டாஸ்மாக் உள்ளிட்டவை திறக்க அனுமதி இல்லை
பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சி செய்ய அனுமதி