சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் சந்தியா உள்ளிட்ட 8 பேர் ஏற்கனவே வண்ணாரப் பேட்டை அனைத்து மகளிர் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இந்த வழக்கில் 9வதாக கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் என்பவர், காவல் ஆய்வாளராக இருக்கும் தனது நண்பர் புகழேந்தியுடன் சேர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்திருந்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் புகழேந்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.