திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா (35) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான தமிழன் பிரசன்னா பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று திமுக தரப்பின் வாதங்களை முன்வைத்து வந்தார். இவர் சென்னை வியாசர்பாடி எடுத்த எருக்கஞ்சேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் அவரது மனைவி நதியா இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக கொடுங்கையூர் பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை பிரசன்னாவின் மனைவி வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பாக தமிழன் பிரசன்னாவிடம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட தகவலின் அடிப்படையில் அவர் குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழன் பிரசன்னா – நதியா தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.