• vilasalnews@gmail.com

ஐகோர்ட் அரசு வழக்கறிஞர்கள் 53 பேர் பதவி நீக்கம் - தமிழக அரசு நடவடிக்கை!

  • Share on

ஆட்சி மாறியதும் ஐகோர்ட் அரசு வழக்கறிஞர்களில் 138 பேர் ராஜினாமா செய்துவிட்டனர். ராஜினாமா செய்யாமல் இருந்த 53 பேர் பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை ஐகோர்ட் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளையில் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்ட வர்களில், நடந்து முடிந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி மாறியதும் சென்னை ஐகோர்ட் அரசு வழக்கறிஞர்களில் 108 பேர் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளை அரசு வழக்கறிஞர்களில் 30 பேர் ராஜினாமா செய்தனர்.

அதிமுக வழக்கறிஞர்களின் இந்த ராஜினாமாவை ஏற்று அரசாணை பிறக்கப்பட்டது. 138 பேரின் ராஜினாமாவை ஏற்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், புதிய ஆட்சியின் கீழ் தலைமை அரசு வழக்கறிஞராக சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டார்.

சென்னை ஐகோர்ட், ஐகோர்ட் மதுரை கிளை ஆகியவற்றுக்கும் தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ராஜினாமா செய்யாத அதிமுக வழக்கறி ஞர்களை அதிரடியாக பதவி நீக்கம் செய்யது நடவடிக்கை எடுத்திருக் கிறது தமிழக அரசு. சென்னை ஐகோர்ட்டின் வழக்கறிஞர்கள் 28 பேர், ஐகோர்ட் மதுரை கிளை வழக்கறிஞர்கள்25 பேர் என மொத்தம் 53 பேர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  • Share on

அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் மனிதம் போற்றும் மனிதநேய திருச்சி தம்பதியினர்!

பெண் காவலரை மிரட்டிய ஆட்டோ ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு!

  • Share on