வீட்டு வாடகை, இஎம்ஐ கட்ட கால அவகாசம் வழங்க வேண்டி திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது .
கொரோனா காலத்தில் மக்கள் வீட்டில் முடங்கி வாழ்வாதாரம் மிகவும் பின் தங்கி இருக்கும் இந்த நேரத்தில் வீட்டு வாடகை பணம் தர வேண்டி வீட்டின் உரிமையாளர்கள் நெருக்கடி கொடுத்து வரும் சூழல் உள்ளது. ஆகவே ஊரடங்கு தளர்வு வரும் வரையில் வீட்டு வாடகைக்கு கால அவகாசம் வழங்க நடவக்கை எடுக்க வேண்டும் .
தனியார் நிதி நிறுவனத்தில் பொது மக்கள் மாத தவனை முறையில் வீட்டு பொருட்கள் மற்றும் வாகனங்கள் வாங்கி உள்ளார்கள். இந்த கொரோனா காலத்தில் அன்றாட குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் மிகவும் சிரமம் பட்டு உள்ளனர். ஆக்வே வட்டி இல்லாமல் கடனை மட்டும் செலுத்த பொதுமக்களுக்கு கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக கேட்டு கொள்கிறோம் . இவ்வாறு அவ்மனுவில் கூறியுள்ளார்.