நடிகை சாந்தினி அளித்த புகார் பொய்யானது என்று முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி கால்துறையில் புகார் அளித்துள்ளார்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி காவல்துறையில் புகார் அளித்திருந்தார். பல ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு, திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருகிறார் என்று அவர் கூறியிருந்தார். திருமணம் செய்து கொள்ள சொன்னால், அந்தரங்க புகைப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டுகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் தன்னுடன் 5 ஆண்டுகள் தொடர்பில் இருந்த போது, ஆபாச புகைப்படங்களை எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுவதாகவும் புகாரில் கூறியுள்ளார். எனவே மணிகண்டன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது வீடியோக்கள், புகைப்படங்களை அழிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மீது சாந்தினி அளித்துள்ள பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இதுகுறித்து விளக்கமளித்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன், நடிகை சாந்தினியை யார் என்றே தெரியாது என்று கூறியுள்ளார். அவர்களை பணம் பறிக்கும் கும்பல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆதாரங்களை திரட்டும் பணிகளை தொடங்க இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து மணிகண்டனை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மணிகண்டன் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியானது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நடிகை சாந்தினி தனது கணவர் மீது அளித்த புகார் பொய்யானது என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது குடும்பம் மீது, கணவர் மீது நடிகை சாந்தினி அவதூறு பரப்புவதாகவும் அவர் குற்றம்சாட்டி யுள்ளார். தங்களை மன உளைச்சலை ஏற்படுத்திய சாந்தினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அளித்த புகார் அடையாறு மகளிர் காவல்நிலையத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது. அடையாறு மகளிர் காவல்நிலையத்தில் தான் நடிகை சாந்தி புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.