• vilasalnews@gmail.com

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் : தமிழக அரசு அறிவிப்பு !

  • Share on

தளர்வில்லா ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்று தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் இயக்கப்படாமல் உள்ளன. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்தாண்டு 9,10,11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் 12 ஆம் வகுப்பு தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆனாலும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறந்த உடன் இலவச பாடப்புத்தகங்கள் இதர நலத்திட்டங்கள் வழங்குவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

தமிழகத்தில் 1 முதல் 8ஆம்
வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் எனவும் தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். அதேபோல் எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக்கூடாது ; எந்த குழந்தையும் பள்ளியைவிட்டு வெளியேற்றக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை ஆசிரியர்கள் பள்ளி பதிவேட்டில் மாணவர்களின் தேர்ச்சி விவரத்தை பதிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

  • Share on

உலமாக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ 7000 வழங்க வேண்டும் : முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவியும் காவல் நிலையத்தில் புகார்!

  • Share on