• vilasalnews@gmail.com

" அந்த நாட்களில் கூட கட்டாய உடலுறவு..." முன்னாள் அமைச்சர் குறித்து பகிர் தகவலை வெளிட்ட சாந்தினி!

  • Share on
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை சாந்தினி காவல் துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் தான் மணிகண்டன். ஆனால் முதல்வர் பழனிசாமி குறித்து செய்தியாளர்களிடம் கூறிய கருத்தால் அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.

கேபிள் கட்டணத்தை குறைப்பது பற்றி முதல்வர் தன்னிடம் விவாதிக்கவில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதே பதவி பறிப்புக்கு காரணம் என்று கூறப்பட்டது. அதன்பிறகு மணிகண்டன் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை சாந்தினி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தன்னுடன் பல ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு, திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருகிறார் என்று அவர் மீது புகார் அளித்துள்ளார் சாந்தினி.

மலேசியாவை சேர்ந்த நடிகை சாந்தினி, நாடோடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள சொன்னால், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலை தளங்களில் வெளியிடு வதாக மிரட்டுகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து தன்னை பல முறை பாலி யல் வன்புணர்ச்சி செய்ததாக வும் சாந்தினி கூறியுள்ளார். மேலும் தான் கர்ப்பமான போது, கருவை கலைக்க வைத்து தன்னை துன்புறுத்தியதாகவும் தெரிவித் துள்ளார்.

அந்த வகையில் தன்னுடன் 5 ஆண்டுகள் தொடர்பில் இருந்த போது, ஆபாச புகைப்படங்களை எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுவதாகவும் புகாரில் கூறியுள் ளார். எனவே மணிகண்டன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது வீடியோக் கள், புகைப்படங்களை அழிக்க வேண்டும் என்று தெரிவித்துள் ளார். அமைச்ச்ர் மீது சாந்தினி அளித்துள்ள பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே இதுகுறித்து விளக்கமளித்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன், நடிகை சாந்தினியை யார் என்றே தெரியாது என்று கூறியுள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வக்கீல் ஒருவரும் காவல்துறை அதிகாரி ஒருவரும் தன்னிடம் பேசினார்கள் என்றும், சாந்தியுடன் நீங்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வைத்து நாங்கள் காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாக தன்னை மிரட்டினார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் புகார் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் மூன்று கோடி ரூபாய் தரவேண்டும் என்றும், பணம் பறிக்கும் கும்பல் சாந்தினியை பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த பொய்யான புகாரை சட்டப்படி சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த சாந்தினி மணிகண்டன் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். அவரின் சுயரூபம் தெரிந்த பிறகு காவல்துறையில் புகாரளிப்பேன் என்றும், அதற்கான ஆதாரங்கள் தன் செல்போனில் இருப்பதாகவும் அவரது செல்போனை சுக்கு நூறாக உடைத்தவிட்டதாக தெரிவித்து ள்ளார். மேலும் சண்டை வரும் போதெல்லாம், கையில் கிடைத்த பொருட்களை தூக்கி அடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் மாதவிடாய் காலங்களில் கூட தன்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொள்வார் என்று தெரிவித்துள்ளார்.

எனவே மணிகண்டனுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க வேண்டும் என்று சாந்தினி கூறியுள்ளார். மேலும் தான் பணம் பறிக்க இந்த புகாரை அளிக்கவில்லை எனவும், தன்னுடைய வங்கிக் கணக்குகளை சரி பார்த்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் குறித்து சாந்தினி தெரிவித்துள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • Share on

அன்னைத் தமிழ் மண்ணில் அற உணர்வு தழைத்தோங்கட்டும் – முதல்வர் ஸ்டாலின்

உலமாக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ 7000 வழங்க வேண்டும் : முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !

  • Share on