முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்றுப் பேரிடரின் தாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க, முதலமை ச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைத்துத் தரப்பினரும் தாராள நிதி வழங்கி உதவ வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தேன்.
அதனை ஏற்றுப் பெரும் தொழில திபர்கள், நடுத்தர, சிறு, குறு தொழில் நடத்துவோர், திரையுல கினர், சமூகத்தில் வசதி படைத் தவர்கள் முதல் ஏழை, எளிய சாமா னிய மக்கள் வரை அனைத் துத் தரப்பினரும், பெருந் தொற்றை முறியடித்தே தீர வேண்டும் என்ற பேரார்வத்துடனும், பேரன்புடனும் தங்களால் இயன்ற நிதியை இன்மு கத்துடன் வழங்கி வருகிறார் கள் என்பதை அறிவீர்கள்.
கொரோனா துயர் துடைக்க முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காகத் தங்கள் சேமிப்பை வழங்க முன்வரும் சிறார்கள், சிறுமியர்கள் உள்ளிட்ட பிள்ளைச் செல்வங்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில், உலகப் பொதுமறையாம் திருக்குறள் நூலொன்று அனுப்பி வைக்கப் படும் என்பதைக் கனிவு டன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னைத் தமிழ் மண்ணில் அற உணர்வு தழைத்தோங்கட்டும் என தெரிவித்துள்ளார்.