• vilasalnews@gmail.com

கொரோனா தடுப்பூசியால்தான் நான் உயிர் பிழைத்தேன் - அமைச்சர் துரைமுருகன்!

  • Share on

கொரோனா தடுப்பூசியால் தான் உயிர் பிழைத்தேன் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். கொரோனா பாதிப்பில் இருந்து நம்மை காத்துக் கொள்ள தடுப்பூசி தான் ஒரே வழி என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதனால், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தற்போது அதிகளவில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டும் செயல்படுத்தப் படாமல் உள்ளது.

தடுப்பூசிகள் வாங்க தமிழக அரசு டெண்டர் விடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல், செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல் தடுப்பூசி தாயரிக்கும் நிறுவனத்திலும் தடுப்பூசி தயாரிப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. தடுப்பூசி தான் நமது பாதுகாவலன், நோயிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் தான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டும் தான் உயிர் பிழைத்ததாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூரில் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கவிழா மற்றும் தடுப்பூசி முகாம் துவக்கவிழாவில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார்.  இதன் பின்னர் பேசிய அமைச்சர் துரைமுருகன், அரசு வழங்கும் இலவச தடுப்பூசியை போட்டுக்கொள்ள மக்கள் அச்சப்படுகிறார்கள்.

இது தவறான எண்ணம். தடுப்பூசியை போட்டுக்கொண்டால்தான் கொரோனா வைரசை முழுமையாக அழிக்க முடியும். தடுப்பூசி வந்த உடன் நான் அதை போட்டுக்கொண்டேன்.

தடுப்பூசியால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் தான் நான் உயிர் பிழைத்தேன். தடுப்பூசியால் தான் வைரஸ் என்னை தாக்கவில்லை’ என்றார்

  • Share on

ஹெச்.ராஜா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்!

பரோல் கேட்டு முதல்வருக்கு நளினி கடிதம்

  • Share on