• vilasalnews@gmail.com

ஹெச்.ராஜா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்!

  • Share on

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் தந்தையான ஜெயிலர் ஜெயபிரகாஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினராக தற்போது உள்ள ஜவாஹிருல்லா என்று பரபரப்பு கருத்து ஒன்றை கூறினார்.

இந்நிலையில் ஹெச். ராஜா பொய்யான கருத்துக்களை பரப்பி வருவதாக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அப்ரார், “நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையான ஜெயிலர் தாஸ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ஆனால் வேண்டுமென்றே ஜவாஹிருல்லாவின் பெயரைக் கெடுப்பதற்காக ஹெச். ராஜா பொய்யான புகாரை கூறி வருகிறார்.

இது இஸ்லாமியர்களுக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் இடையே மோதலை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது . ஹெச். ராஜா அவதூறு வழக்கு கருத்துகளை கூறி விட்டு மன்னிப்புக் கேட்பதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.

ஆனால் இந்த முறை அவர் மன்னிப்பு கேட்டாலும் கூட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சிவகார்த்திகேயனும் தலையிட்டு புகார் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்றார்.

  • Share on

தமிழகத்தில் ஒரு வாரம் கடும் ஊரடங்கு : எதற்கெல்லாம் அனுமதி?

கொரோனா தடுப்பூசியால்தான் நான் உயிர் பிழைத்தேன் - அமைச்சர் துரைமுருகன்!

  • Share on