• vilasalnews@gmail.com

அம்மா அரசு நிச்சயம் விடுதலை வாங்கி தருவார்கள்_பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் உருக்கம்

  • Share on

“முதல்வர் நிச்சயம் ஆளுநரிடம் பேசி விடுதலை வாங்கித் தருவார்” : பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய கோரி அரசியல் கட்சி தலைவர்களும்,பல அமைப்புகளும், பிரபலங்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். பேரறிவாளன் விடுதலை நாளை எதிர்நோக்கி அவரது தாயார் அற்புதம்மாள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார். பேரறிவாளனை பொறுத்தவரையில் சிவராசனுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் அதற்காக வாங்கி வர சொல்லப்பட்டது என்பது தனக்கு தெரியாது என்றும் அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இந்த வாக்குமூலத்தின் ஒரு பாதையை தான் எடுத்துக் கொண்டு மறு பாதியை விட்டுவிட்டதாக அப்போது சிபிஐ அதிகாரியாக இருந்த தியாகராஜன் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் மாநில அரசு தனது முடிவை எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் தமிழக அமைச்சரவை 7 பேரையும் விடுவிக்க கூடிய தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனாலும் 7 பேர் விடுதலை குறித்த தீர்மானத்தில் எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் கடந்த பல மாதங்களாக மௌனம் காத்து வருகிறார்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆளுகின்ற அம்மாவுடைய அரசு தற்போது முதல்வர் நிச்சயம் ஆளுநரிடம் பேசி விடுதலை வாங்கித் தருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் ” என்றார்.“முதல்வர் நிச்சயம் ஆளுநரிடம் பேசி விடுதலை வாங்கித் தருவார்” : பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய கோரி அரசியல் கட்சி தலைவர்களும்,பல அமைப்புகளும், பிரபலங்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். பேரறிவாளன் விடுதலை நாளை எதிர்நோக்கி அவரது தாயார் அற்புதம்மாள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார். பேரறிவாளனை பொறுத்தவரையில் சிவராசனுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் அதற்காக வாங்கி வர சொல்லப்பட்டது என்பது தனக்கு தெரியாது என்றும் அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இந்த வாக்குமூலத்தின் ஒரு பாதையை தான் எடுத்துக் கொண்டு மறு பாதியை விட்டுவிட்டதாக அப்போது சிபிஐ அதிகாரியாக இருந்த தியாகராஜன் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் மாநில அரசு தனது முடிவை எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் தமிழக அமைச்சரவை 7 பேரையும் விடுவிக்க கூடிய தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனாலும் 7 பேர் விடுதலை குறித்த தீர்மானத்தில் எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் கடந்த பல மாதங்களாக மௌனம் காத்து வருகிறார்.

  • Share on

நெருங்கும் புயல்... இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழை

“இரவு முழுவதும் உறவுக்காக கட்டி வைத்தான்” – தோப்புக்குள் தூக்கி செல்லப்பட்ட பெண் கதறல் .

  • Share on