• vilasalnews@gmail.com

"தமிழகத்தில் 9 பேருக்கு கருப்பு பூஞ்சை" உயிர் பலி இல்லை!

  • Share on

கருப்பு பூஞ்சை பாதிப்பை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30ஆயிரத்தை கடந்து வருகிறது. அத்துடன் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களை கருப்புபூஞ்சை (மியூகோர் மைகோசிஸ்) என்ற புதிய தொற்று தாக்குவதாக தெரிகிறது. இதனால் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உயர்பலிகளும் நிகழ்ந்துள்ளது.

அத்துடன் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் 9 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கோவில்பட்டியில் ஒருவர் கொரோனாவில் இருந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கருப்பு பூஞ்சை பாதிப்பை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. கருப்பு பூஞ்சை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கப் படவேண்டும்.

இது புதிதாக உருவான தொற்று பாதிப்பு அல்ல. கருப்பு பூஞ்சை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகள் 7 பேர் உள்பட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் உண்டாகியுள்ளது. அனைவரும் நலமுடன் உள்ளனர்” என்றார்.

  • Share on

மருத்துவமனைக்கு இலவச அமரர் ஊர்திகளை வழங்கிய வானதி சீனிவாசன்!

கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழந்த 36 காவலர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

  • Share on