தமிழக முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியது.
கொரோனாவை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள் என்று தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்தநிலையில் தமிழக முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்த பணத்தை கொடுப்பதாக அறக்கட்டளை தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.