• vilasalnews@gmail.com

கொரோனா நிவாரணத்துக்கு தாராளமாக நிதி வழங்குகள் – ஸ்டாலின்

  • Share on

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 “கொரோனா இரண்டாவது அலையால் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் பாதுக்கப்பட்டு தற்போது 1,52,389 பேர் சிகிச்சையிலும், அதில் 31,410 பேர் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சையிலும் உள்ளனர். இந்த அலை நமது மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பின் மீது கடும் தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தவும், ஆக்ஸிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு ஆலைகளை அமைக்கவும், ஆக்ஸிஜன் படுக்கைகளை அதிகரிக்கவும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்களும், தொழில் நிறுவனங்களும் தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டுகிறேன்.

மக்கள் அளிக்கும் நன்கொடை முழுவதும் கொரோனா மருத்துவ கட்டமைப்பிற்கு மட்டுமே செலவிடப்படும். மேலும், செலவீனங்கள் குறித்த வெளிப்படையான தகவல்கள் மக்களுக்கு அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

  • Share on

7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறை மற்றும் வணிகர்களுக்கு பல்வேறு சலுகைகள் - தமிழக அரசு அறிவிப்பு

  • Share on