தமிழகத்தில் வரும் 10 -ம் தேதி முதல் 24- ஆம் தேதி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்படும் சேவைகள், மற்றும் எவற்றுக்கெல்லாம் தடை என்பது குறித்த முழு விவரத்தை காணலாம்.
- மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை தொடரும்.
- வெளிநாடுகள், மற்றும் இதர மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்க இ பதிவு முறை தொட்ர்ந்து செயல்படுத்த ப்படும். ரெயில் மற்றும் விமான நிலயங்களுக்கு சென்று வர பயணச்சீட்டுடன் அனுமதிக்கப்படும்.
- தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு கடைகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
- மின் விணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கபப்டும். இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப் படுகிறது.
- முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.
- அனைத்து உணவகங் களிலும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப் படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்படும்.
- உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியி ல்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர் களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை.
- மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி வழங்கப்படும்.
- உள் அரங்குகள், திறந்த வெளியில் சமுதாயம், அரசியல் விளையாட்டு, பொழுதுபோக்கு கல்வி, கலாசாரம் நிகழ்வுகள் இதர விழாக்களுக்கு தடை விதிக்கபப்டுகிறது.
- ஏற்கனவே அறிவித்த படி இறப்பு நிகழ்வுகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை
- மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் அழகு நிலையங்கள் முடி திருத்தும் கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
- அனைத்து வழிபாட்டு தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. குடமுழுக்கு, மற்றும் திருவிழா நடத்த அனுமதியில்லை.
- மாவட்டங்களுக்குள், மாவட்டங்களுக்கு இடையேயான அரசு தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது.
- அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவு தபால்சேவை, மருத்துவ மனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், ஆம்புலன்ஸ், மருந்தங்கள் செயல்பட அனுமதி உண்டு.
- அனைத்து சரக்கு வாகன போக்குவரத்து ஆகியற்றிற்கு அனுமதி உண்டு.
- பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்படும்.
- வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவனங்கள் சேவைகள் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி
- முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப் படுகிறது. மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.சாலையோர உணவகங்கள் செயல்பட அனுமதி கிடையாது
- அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
- நியாயவிலைக்கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.
- ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்.
- அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.