• vilasalnews@gmail.com

தமிழகத்தில் ஓட்டுபோட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? தேர்தல் ஆணையம் வெளியீடு

  • Share on

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஓட்டுபோட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? என இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதிகபட்சமாக, பாலக்கோடு தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 36 ஆயிரத்து 843 வாக்காளர்களில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 922 பேர் (87.37 சதவீதம்) வாக்களித்துள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 214 பேர் ஆண்கள், 1 லட்சத்து ஆயிரத்து 708 பேர் பெண்கள்.

குறைந்தபட்சமாக, சோழிங்கநல்லூரில் மொத்தமுள்ள 6 லட் சத்து 98 ஆயிரத்து 820 வாக்காளர்களில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 948 பேர் (55.51 சதவீதம்) வாக்களித்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 545 பேர் ஆண்கள், 1 லட்சத்து 91 ஆயிரத்து 384 பேர் பெண்கள். 19 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 6.28 கோடி வாக்காளர்களில் 4.58 கோடி பேர் (72.81 சதவீதம்) வாக்களித்துள்ளனர்.

இவர்களில் 2 கோடியே 26 லட்சத்து 3 ஆயிரத்து 156 பேர் ஆண்கள், 2 கோடியே 31 லட்சத்து 71 ஆயிரத்து 736 பேர் பெண்கள், 1,419 பேர் 3-ம் பாலினத்தவர்.

  • Share on

கமலின் சொத்து மதிப்பு 176 கோடி ரூபாய், வேட்பு மனுவில் தகவல்

தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல் - யாருக்கு எல்லாம் இ-பாஸ் தேவை? எதற்கெல்லாம் தடை?

  • Share on