• vilasalnews@gmail.com

கமலின் சொத்து மதிப்பு 176 கோடி ரூபாய், வேட்பு மனுவில் தகவல்

  • Share on

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு தமிழகம் மற்றும் லண்டனில் சொத்து இருப்பது வேட்புமனுவில் தெரியவந்துள்து.

கமல்ஹாசனுக்கு 45 கோடியே 9 லட்சம் ரூபாய் அளவில் அசையும் சொத்தும், 131 கோடியே 84 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்தும் இருப்பதாக வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது.

அதோடு அவரது கடன் அளவு 49 கோடியே 50 லட்சத்து 11 ஆயிரத்து 10 ரூபாயாகும். மொத்தமாக கமல்ஹாசனின் சொத்து மதிப்பு 176 கோடியே 93 லட்சத்து 46 ஆயிரத்து 476 ரூபாயாக உள்ளது.

மேலும், அவருக்கு 2 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பில் லெக்சஸ் மாடல் காரும், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பி.எம்.டபிள்யூ காரும் உள்ளதாக வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது. கமல்ஹாசனுக்கு லண்டனில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடும் உள்ளது.

  • Share on

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் முதல்வர்!

தமிழகத்தில் ஓட்டுபோட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? தேர்தல் ஆணையம் வெளியீடு

  • Share on