• vilasalnews@gmail.com

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் முதல்வர்!

  • Share on

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் போது, குறுகிய காலகட்டத்தில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் கண்டுபிடித்தது இந்தியா.

இது உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. 3 கட்ட பரிசோதனைக்கு பிறகு, கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அண்மையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவனும் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அவர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Share on

அதிமுக கூட்டணியில் இன்னும் ஒதுக்கப்படாத 12 தொகுதிகள்! யாருக்காக வெயிட்டிங்?

கமலின் சொத்து மதிப்பு 176 கோடி ரூபாய், வேட்பு மனுவில் தகவல்

  • Share on