• vilasalnews@gmail.com

அதிமுக கூட்டணியில் இன்னும் ஒதுக்கப்படாத 12 தொகுதிகள்! யாருக்காக வெயிட்டிங்?

  • Share on

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக ,பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்தனர். இதில் பாமகவுக்கு 23, பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 

2011 ஆம் ஆண்டு ஜெ. தலைமையிலான அரசில் எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தரப்பிலிருந்து இந்த முறை தேமுதிகவுக்கு 40 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதன்பின் தொகுதிகளை குறைத்து 25 தொகுதிகளை எதிர்பார்த்த தேமுதிகவுக்கு அதிமுக, 13 முதல் 17 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முன்வந்தது.

பாஜக, பாமகவுக்கு கொடுக்கப்பட்டதற்கு ஈடாக கூட தொகுதிகளை கொடுக்க ஒத்துழைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தேமுதிக, கூட்டணியில் இருந்து விலகி விட்டது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இன்னும் 13 தொகுதிகளுக்கான விவரங்கள் வெளியாகவில்லை. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 இடங்களும், பாஜகவுக்கு 20 இடங்களும், அதிமுகவுக்கு 177 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 220 தொகுதிகளுக்கான பட்டியல் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு எழும்பூர் (தனி) தொகுதியும், அதிமுக கூட்டணியில் என். ஆர். தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 தொகுதிகள் யாருக்கும் ஒதுக்கீடு செய்யவில்லை.

  • Share on

பெண் எஸ்பியை தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் சஸ்பெண்ட்!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் முதல்வர்!

  • Share on