• vilasalnews@gmail.com

பெண் எஸ்பியை தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் சஸ்பெண்ட்!

  • Share on

செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணனை இந்திய தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்டா மாவட்ட சுற்றுப்பயணம் சென்றபோது உடன் சென்றார். அப்போது அவரை வரவேற்க வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் ராஜேஷ் தாஸ் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக தெரிகிறது.

இவரது அத்துமீறல் குறித்து சென்னையில் உள்ள டிஜிபியிடம் புகார் அளிக்க தனது காரில் பெண் எஸ்பி சென்ற போது பரனூர் சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு எஸ் பி கண்ணன் வழிமறித்து டிஜிபியிடம் புகார் கூற வேண்டாம் என அவரது காரை வழிமறித்ததாக தெரிகிறது.

மேலும் செங்கல்பட்டு டிஎஸ்பி மூலம் பெண் எஸ்பியின் கார் சாவியையும் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், அவருடன் இருந்த டிஎஸ்பி , இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்துள்ளதார்.

இதையடுத்து புகாருக்கு ஆளான எஸ்.பி கண்ணன் தற்போது செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதவியில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வணிக குற்றப்பிரிவிற்கு அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக தேர்தல் ஆணையத்திற்கு காவல் ஆணையர் கடிதம் எழுதினார். இதையடுத்து தமிழக தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் பேரில் கண்ணனை இந்திய தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

  • Share on

அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது தேமுதிக!!

அதிமுக கூட்டணியில் இன்னும் ஒதுக்கப்படாத 12 தொகுதிகள்! யாருக்காக வெயிட்டிங்?

  • Share on