அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” நடைபெற உள்ள 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது .
தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து, ஒரு உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்துகளின் அடிப்படையில் இன்றிலிருந்து அதிமுக- பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிமுக விலகுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.