உலக பெண்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பெண்கள் தினத்தை முன்னிட்டு அமெரிக்க காங்கிரஸ் ஆலோசனை பணிக் குழு சார்பில் 2020-ம் ஆண்டுக்கான சர்வதேச தலைசிறந்த 20 பெண்கள் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உலகிலுள்ள 20 பெண்களுக்கு விருது அளிக்கப்பட்து. இதில் தெலுங்கனா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதில் தமிழிசை குறித்த அறிவிப்பில், மருத்துவராகவும், தமிழக பாஜக தலைவராகவும் இருந்த தமிழிசை தற்போது தெலுங்கனா ஆளுநராகவும், புதுச்சேரி பொறுப்புதுணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்து வருகிறார் என அவர் கடந்து வந்த பாதைகள் குறித்து புகழாரம் சூட்டப்பட்டது. சர்வதேச பெண்கள் தினத்தில், தமிழிசைக்கு விருது அளிக்கப்பட்டதற்கு காரணம் பெண்கள் உரிமை, பாலின சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் குறித்து கிடைக்கும் தளங்களில் தவறாமல் பேசி வருகிறார் தமிழிசை. பெண்கள் மீதான வன்முறை குறித்தும் பல நேரங்களில் காட்டமான கருத்துக்களை பதிவு செய்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.
காங்கிரஸ் பாரம்பரியம் கொண்ட குடும்பத்திலிருந்து வந்த தமிழிசை, பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். பெண் அரசியல் தலைவர்களில் குறிப்பிட்டு பெயர் சொல்லக்கூடிய அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ள தமிழிசை இரு மாநிலங்களுக்கு ஆளுநராக இருக்க கூடிய அளவிற்கு தன்னை பக்குவப்படுத்திக்கொண்டார். உருவ கேலி, கிண்டலை துச்சமாக நினைத்து கடந்து சென்றவருக்கு இந்த விருது என்பது ஆரம்பமே எனலாம்