உலக மகளிர் தினத்தையொட்டி தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தங்களின் வாழ்வியலில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் அனைத்து மகளிருக்கும் அன்பான மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, பெண்கள் நலத்திட்டங்களை அம்மா வழியில் தொடர்ந்து செயல்படுத்தி, பெண்கள் பாதுகாப்பை என்றும் உறுதி செய்வேன் என உறுதியளிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் துணை முதல்வர் ஓபிஎஸ், “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்” தங்களின் ஈடு இணையற்ற உழைப்பால், அன்பால், தியாகத்தால் சமூக வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றும், இப்பூமிப்பந்தை இயக்கும் அச்சாணியாகத் திகழும் பெண்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த “உலக மகளிர் தின” நல்வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.