விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட நாளை முதல் மார்ச் 8 வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
திமுக, அதிமுக கட்சிகளில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை விறுவிறுப்புடன் நடந்து வருகின்றன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் குறைந்தபட்சம் 8 தொகுதிகள் கேட்டது. ஆனால் திமுக 6 தான் கொடுத்தது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். திருமாவளவனும் கொஞ்சம் அதிபருத்தியுடன் காணப்பட்டார்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட நாளை முதல் மார்ச் 8 வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விசிக தலைமையகமான அம்பேத்கர் திடலில் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.