• vilasalnews@gmail.com

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிரபல கிறிஸ்துவ மத போதகர்!

  • Share on

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் ( 37 ). இவர் காந்திபுரம் பகுதியில் உள்ள ஜெப கூடத்தில் மத போதகராக உள்ளார். மேலும், இவர் தன்னுடைய இசைக் கச்சேரிகள் மூலம் கிறிஸ்துவ சமுதாயத்தில் நன்கு பிரபலமானவர்.


தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இசைக் கச்சேரி நடத்தியுள்ளார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தையும் இருக்கிறது.


ஜான் ஜெபராஜின் மாமனார் ஒரு ஆதரவற்ற சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். ஜெபராஜ் கடந்த 2024 மே 21 ஆம் தேதி தன் வீட்டில் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதில் கலந்து கொண்ட 17 வயது மற்றும் 14 வயதுடைய சிறுமிகளிடம் மதபோதகர் ஜெபராஜ் 2  பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார். அதனால் பயந்து போன சிறுமிகள் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.


ஆனால், இந்த பாலியல் தொல்லை குறித்து சிறுமிகள் உடனடியாக யாரிடமும் தெரிவிக்கவில்லை. பின்னர் அவர்களின் நடவடிக்கையை பார்த்து உறவினர் ஒருவர் பேசிய போது அதில் ஒரு சிறுமி பாலியல் சீண்டல் குறித்து கூறியுள்ளார். அவர்கள் மூலம் இந்த தகவல் காவல்துறைக்கு சொல்லப்பட்டது.


வழக்கை விசாரித்த அனைத்து மகளிர் (மத்திய) காவல்நிலையத்தில், ஜான் ஜெபராஜ் மீது போக்சோ உள்ளிட்ட  3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள ஜெபராஜை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.  

  • Share on

ஜெபம் செய்வதாக கூறி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மதபோதகர் உட்பட 2 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை!

ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி என்பது அந்த சமுதாயத்தின் அடிப்படை பாதுகாப்பு தான் : உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன்!

  • Share on