• vilasalnews@gmail.com

41லிருந்து 25க்கு கீழ் இறங்கிய தேமுதிக... அதற்கும் கீழே வாங்க... அதிமுக கறார்... தேமுதிக பரிதாபம்!

  • Share on

கூட்டணிக் கட்சிகளில் பாமகவிடம் மட்டுமே தொகுதிப் பங்கீட்டை அதிமுக முடித்துள்ளது. ஆனால் இன்னமும் பாஜக, தேமுதிகவுடன் இழுபறியுடனே செல்கிறது. அதிமுகவின் அழைப்பை தேமுதிக தரப்பு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. 15 தொகுதிகளில் உடன்பட்டு ஒப்பந்தம் போட அதிமுக அழைக்கிறது. ஆனால் தேமுதிக அதற்கே வாய்ப்பே இல்லை என மறுப்பு தெரிவிக்கிறது.

இத்தகைய பரப்பான சூழலில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி :

 “தேமுதிக சார்பில் 5 பேர் கொண்ட குழு தொகுதிப் பங்கீடு குறித்து பேச அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 பேர் இரண்டு கட்டமாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

எங்கள் தலைவர் கேட்ட தொகுதிகளைக் கேட்டுள்ளோம். ஆனால், அதிமுக தொகுதி குறைவாகவே தருவோம் என்று சொல்கிறது. எனவே, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எங்கள் இலக்கிற்கு ஒப்புக்கொண்டால், கையெழுத்திட வருவோம். 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா இருந்தபோது, 41 தொகுதி தேமுதிக சார்பில் கேட்கப்பட்டது. இதனைபோன்று, இந்த முறையும் 41 தொகுதி கேட்டுள்ளோம். ராஜ்யசபா சீட் கேட்டது உண்மைதான். சீட் கொடுப்பதாக அதிமுக உறுதியளித்துள்ளது.

இன்னும் 2 நாளில் பேச்சுவார்த்தை முடிவடையும். 41 தொகுதிகள் நாங்கள் கேட்டுள்ளோம், ஆனால், கூட்டணியில் இரண்டு பெரிய கட்சிகள் உள்ளன. எனவே குறைவாக இடம் கேட்க அதிமுக கேட்டுக்கொண்டது. இதனைக் கருத்தில்கொண்டு தற்போது நாங்களும் தொகுதிகளைக் குறைத்துள்ளோம். 41 தொகுதியில் இருந்து 25 தொகுதி வரை இறங்கிவந்துள்ளோம். எனவே, பேச்சுவார்த்தை மூலம் தொகுதி பேசி முடிப்போம்” என்றார்.


  • Share on

தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள்!

வி.சி.க சார்பில் போட்டியிட நாளை முதல் 8-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் - திருமாவளவன்

  • Share on