தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணிக்கான உடன்படிக்கை இன்று அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது.
முன்னதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 இடங்கள், மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்கள், விடுதலை சிறுத்தைகள் 6 இடங்கள் என ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.