
மதுரை மாநகராட்சி திமுக முன்னாள் மண்டல தலைவர் குருசாமியின் ஆதரவாளர் காளீஸ்வரன் நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை தனக்கன்குளம் பகுதியில், நேற்றிரவு வீட்டின் வெளியே வந்த காளீஸ்வரனை 3 பைக்குகளில் வந்த மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். வி.கே.குருசாமிக்கும், அதிமுகவைச் சேர்ந்த மறைந்த ராஜபாண்டிக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்தது.
இரு தரப்பினருக்கு இடையே மோதல் காரணமாக 15க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பழிக்கு பழியாக காளீஸ்வரன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் பெங்களூருவில் வி.கே.குருசாமி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.